தமிழ் தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் கொண்டாடப் பட்டு மிகப்பெரிய ஹிட் அடித்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘குக்கு வித் கோமாளி’. கடந்த மூன்று ஆண்டுகளும் வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்தி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இந்த ஆண்டு வெற்றிகரமாக நான்காவது சீசனை நடத்தி முடித்தது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நடிகர்கள் ஸ்ருஷ்டி டாங்கே, சேரின், விசித்ரா, ஆண்ட்ரியன் மைம் கோபி, கலை இயக்குனர் கிரண் மற்றும் முன்னாள் கோமாளியாக இருந்த சிவாங்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் தொடர்ந்து ஏற்கனவே பிரபலமான கோமாளிகள் புகழ், சுனிதா, குரேஷி உடன் இணைந்து இந்த சீசனில் புது கோமாளியாக மோனிஷா, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,

ரசிகர்களின் பெரும் ஆதரவோடு குக்கு வித் கோமாளி சமீபத்தில் நடந்து முடிந்தது. இறுதி போட்டியில் மைம் கோபி வெற்றியாளராக பட்டம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு உதவிய கோமாளிகளான மோனிஷா மற்றும் குரேஷி ஆகியோருக்கு தலா 1 லட்சமும் வழங்கப்பட்டது. இந்த சீசனில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய புகழை பெற்றவராக வலம் வந்தவர் மோனிஷா, ஏற்கனவே பல ஷோக்களில் நகைச்சுவை நடிகராக பங்கேற்று கவனம் பெற்ற இவர் இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் வெகு ஜன மக்களின் ஆதரவையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

குக் வித் கோமாளி மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த ‘மாவீரன்’ படத்திலும் மோனிஷா நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் திரைப்படத்திலும் வெற்றியுடன் புகழ் பெற்று வரும் மோனிஷா தற்போது குடியரசு தலைவர் முர்மு அவர்கள் கையால் பட்டம் பெற்றுள்ளார்.

சென்னை பல்கலையில் எம் எஸ் எலக்ட்ரானிக் மீடியாவில் முதல் மதிப்பெண் எடுத்து பெருமை பெற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் இதற்கான பட்டம் பெற்றுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துகளுடன் அப்பதிவு வைரலாகி வருகிறது.