நடிகர் STR மற்றும் ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளார்.

கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலை பயணத்திற்கு பிறகு நீச்சல், உடற் பயிற்சி என ஸ்லிம்மாக மாறி வருகிறார் சிம்பு.

தற்போது படத்தின் படப்பிடிப்பு குறித்தும் எந்தெந்த நடிகர்கள் பணிபுரியவுள்ளனர் என்ற தகவல்கள் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவு செய்துள்ளார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் STR ரசிகர்கள்.