தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.இவர் நடிப்பில் கடைசியாக மாநாடு படம் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு,கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

பத்து தல படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.கன்னடாவில் சூப்பர்ஹிட் அடித்த Mufti படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது.ஓபுலி N கிருஷ்ணா இந்த படத்தினை இயக்கி வருகிறார்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசைமைத்து வருகிறார்.இந்த படத்தில் மற்றுமொரு நாயகனாக கெளதம் கார்த்திக் நடித்து வருகிறார்.

ப்ரியா பவானி ஷங்கர்,கலையரசன்,டீஜே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சிம்பு இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சிம்பு இந்த படத்தின் ஷூட்டிங்கில் மார்ச் மாதம் இணைவார் என தெரிகிறது.

தற்போது இந்த படத்தின் படத்தொகுப்பாளராக மாநாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களின் எடிட்டர் பிரவீன் கே எல் இணைந்துள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.மாநாடு படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

.@StudioGreen2 @kegvraja Welcomes National Award Winning Editor @cinemainmygenes to our #Atman @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar Starrer #PathuThala🔥🔥

An @arrahman Musical 🎶
An @nameis_krishna Directorial🎞️ @NehaGnanavel @Dhananjayang @DoneChannel1 pic.twitter.com/NJOi2y0kWv

— Studio Green (@StudioGreen2) January 25, 2022