இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். அரோல் கோரலி இசையமைத்திருந்தார். புகழ் பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸ் பாணியில் உருவாகியது.

VFF விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக விஷால் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரசன்னா, அனு இமாணுவேல், ஆண்ட்ரியா ஜெரிமையா, பாக்யராஜ், வினய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் தற்போது உருவாக உள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் லண்டன் சென்ற மிஷ்கின், அங்குள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பது போல் உள்ள புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். தீபாவளி பண்டிகைக்கு பிறகு லண்டனில் இரண்டு மாதங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கக்கூடும் என்று சமீபத்தில் தெரியவந்தது. லவ்லி சிங் இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது தெரியவந்தது.