ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில், திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. மிரட்டலான ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக வந்திருக்கும் இந்த ட்ரெய்லர் இந்த ஆயுத பூஜைக்கு லியோ திரைப்பட பக்கா ஆக்சன் ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர் மேலும் ரிலீஸ் நெருங்க நெருங்க இன்னும் ஸ்பெஷலான ப்ரோமோஷன் பணிகள் இருப்பதாகவும் தயாரிப்பாளர் சமீபத்தில் அறிவித்திருக்கிறார். இதனிடையே தற்போது நமது கலாட்டா பிளஸ் சேனலில் நடைபெற்ற சிறப்பு பேட்டியில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான உரையாடலில் கலந்து கொண்டு பேசிய திரு.லோகேஷ் கனகராஜ் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் லியோ படத்தில் இருக்கும் மிரட்டலான பல ஆக்சன் காட்சிகளில் இருக்கும் CG பணிகள் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்படி பேசும் போது,

“அடிப்படையில் தியேட்டரில் வந்து படம் பார்க்கும் ஒரு அனுபவம் என்பது மிக முக்கியம் அதனால் தான் நான் இப்போது OTTயில் படம் பண்ண வேண்டாம் என்ற காரணமே. தியேட்டரில் வந்து உட்கார்ந்தால் அந்த அனுபவத்தை உணர வேண்டும் என்பதற்காக தான். அதில் ஆக்ஷனை தாண்டி வேறு என்ன அனுபவத்தை அவர்களுக்கு கொடுத்து விட முடியும் அதற்கு தான் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொன்று முயற்சி செய்து கொண்டிருந்தோம். வழக்கமாக CG நம்பி நான் போகவே மாட்டேன். கிரீன் மேட் ப்ளூ மேட் வைத்து ஷூட் செய்வதற்கு எதிரான ஆள் நான். எனக்கு அதை படமாக்குவதற்கு ஒரு மூடே இருக்காது. ஆனால் லியோ படத்தில் அதை நான் அதிகமாக முயற்சி செய்து இருக்கிறேன். எனவே நாங்கள் ஜனவரியில் தான் ஷூட்டிங் போகப் போகிறோம் என்று தெரிந்தாலும் அக்டோபரில் இருந்தே அதற்கான வேலையை ஆரம்பித்து விட்டோம் போன அக்டோபரில் இருந்து இந்த அக்டோபர் 12 மாதங்கள் CGகாக வேலை பார்த்திருக்கிறோம் இந்த 12 மாதத்திற்கான உழைப்பு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் படத்தில் பார்க்கலாம். ட்ரெய்லரில் நீங்கள் பார்த்த அந்த கழுதை புலி காட்சி இருக்கிறது அல்லவா அது மாதிரி.” என தெரிவித்திருக்கிறார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த முழு பேட்டி இதோ...