எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,காயத்ரி,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ,ஸ்வாதிஷ்டா,ஸ்ரீகுமார்கணேஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் கிடைத்தது,அதனை உறுதி செய்யும்படி சில வீடியோக்களும் வெளியாகின.விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குனர் லோகேஷ் படத்தில் சூர்யா நடித்துள்ளதை உறுதி செய்துள்ளார்,இதனை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கலாம் என்று நினைத்தோம் ஆனால் லீக் ஆகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த லோகேஷ் அது எதற்கு என்பதை படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக பேசவந்த கமலும் சூர்யா படத்தில் இணைந்ததற்கு நன்றி தெரிவித்தார்.ஏற்கனவே கமல்,விஜய்சேதுபதி,பஹத் என பெரும் நடிகர்கள் இருக்கையில் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்பார்பை எகிற வைத்துள்ளது.

.@Dir_Lokesh with the BIG REVEAL - @Suriya_offl has done a small role in #Vikram 🤩@ikamalhaasan #Suriya @RKFI @anirudhofficial @VijaySethuOffl #KamalHaasan #LokeshKanagaraj #VijaySethupathi #FahadhFaasil #Anirudh #VikramAudioLaunch #VikraminAction

— Galatta Media (@galattadotcom) May 15, 2022