தளபதி விஜயின் பிறந்த நாளான இன்று ஜூன் 22 ஆம் தேதி நள்ளிரவு சரியாக 12 மணிக்கு லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து சோசியல் மீடியாவை அதிர வைத்தது. இதனை அடுத்து சற்று முன்பு லியோ திரைப்படத்தின் முதல் பாடலாக நா ரெடி பாடலும் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தளபதி விஜயின் ஸ்டைலான நடனம் ரசிகர்களை வழக்கம் போல் கவர்ந்துள்ளது. இன்று ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் தளபதி விஜய் அவர்களுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கும் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார்.

முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தில் முதல்முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயுடன் இணைந்தார். அப்போது மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போன சமயத்தில் தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த ஸ்பெஷல் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பின் செய்யப்பட்ட ட்வீட்டாக கடந்த மூன்று ஆண்டுகளாக வைத்திருந்தார் இந்நிலையில் தற்போது லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸாகி இருக்கும் இந்த தருணத்தில் மாஸ்டர் பட போஸ்டருக்கு பதில் லியோ திரைப்படத்தின் போஸ்டரை தற்போது பின் செய்யப்பட்ட ட்வீட்டாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாற்றி இருக்கிறார். இடையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் திரைப்படத்தை இயக்கிய போதும் மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் பின் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பிறகு மூன்று வருட இடைவெளிக்கு பின் இது மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.