தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும், இந்திய சினிமாவில் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராகவும் விளங்கும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது தளபதி 68 திரைப்படத்தில் நடித்துவரும் தளபதி விஜய் அடுத்து இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நீண்ட காலமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி ஸ்டைலில் அட்டகாசமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் எப்போது தளபதி விஜய் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஏற்கனவே இந்த கூட்டணி யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்திற்காக இணைந்தது. பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அதை கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்கள் தனது திரைப் பயணத்தின் பல சுவாரஸ்ய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் "நீங்களும் கௌதம் மேனன் சாரும் ஆரம்ப கட்டத்தில் இருந்து நண்பர்களாக இருந்திருக்கிறீர்கள் இந்த கட்டத்தில் உங்களிடம் இந்த படத்தை பற்றி கேட்க ஆசைப்படுகிறோம் யோகம் அத்தியாயம் ஒன்று அந்த படமும் நீங்கள் பணியாற்ற வேண்டிய படமா?" என்று கேட்டபோது, “உண்மையில் அந்த படத்தை செட் பண்ணியதே நான் தான் நண்பன் படத்திற்கு முன்பே திரைத்துறையில் பலரும் இந்த மாதிரி ஒரு காம்பினேஷன் நடக்க வேண்டுமே என ஆசைப்பட்டு வெவ்வேறு காரணங்களுக்காக அது நடக்காமல் போனது. ஆனால் எல்லோருக்குமே பிடித்த ஒரு காம்பினேஷன் அது. நண்பன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் அஸ்கலஸ்க்கு பாடல் ஷூட்டிங் சமயத்தில் ஸ்பெயினில் லொகேஷனில் நான் நடந்து போய்க் கொண்டிருந்த போது பின்னால் இருந்து ஒரு வாய்ஸ், "ண்ணா... இந்த கௌதம் மேனன் கௌதம் மேனன்னு சொல்றாங்களே அவர் எப்படிண்ணா?" என கேட்டது யாரது என்று திரும்பி பார்த்தால் விஜய் சார். "என்ன சார்" என்று கேட்டேன். "அவர் எப்படிண்ணா?" என்று கேட்டார். "சார் அவர் ஒரு சூப்பரான டைரக்டர் சார் அவரை நம்பி விட்ரனும் வேறு மாதிரி ஒரு உலகத்திற்கு உங்களை கூட்டிட்டு போவார் உங்களை நன்றாக ஸ்டடி செய்து உங்களுக்கு எது எல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் வைப்பார்" என்று சொன்னேன். "உடனே ட்ரை பண்ணலாமா?" என்று கேட்டார். பேசலாம் சார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்தே கௌதம் சாருக்கு போன் செய்து பேசினேன் இந்த மாதிரி விஜய் சார் ஆர்வமாக இருக்கிறார் என்று சொன்னேன். அதன் பிறகு சென்னையில் இதற்காக ஒரு மீட்டிங் தயார் செய்து எல்லாம் நல்லபடியாக சென்றது கௌதம் சார் ஒரு லைன் சொன்னார் அது விஜய் சாருக்கும் பிடித்தது.” என தெரிவித்து இருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.