லெஜண்ட் சரவணன் என்ற இந்த பெயரை அவ்வளவு எளிதில் தமிழகத்தில் யாரும் மறந்துவிட முடியாது. தனது நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் தானே நடித்து இன்று பல தொழில் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு அதன் உரிமையாளர்கள் நடிக்கும் ட்ரெண்டை ஆரம்பித்தவர் லெஜண்ட் சரவணன் தான்.

எப்போதும் விளம்பரங்களில் நடிகர்களே நடித்து வந்த ட்ரெண்டை மாற்றிய லெஜண்ட் சரவணன் மீது எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் வீசப்பட்ட போதும் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கிய லெஜண்ட் சரவணன் அடுத்ததாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார்.

முன்னதாக அஜித் குமார் & சீயான் விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் மற்றும் த்ரில்லர் திரைப்படமான விசில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஜோடியான இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தை இயக்கியுள்ளார்.

தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் லெஜெண்ட் சரவணனின் இந்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை (மார்ச் 4ம் தேதி) காலை 9:55 மணி அளவில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

It’s time to set new trends.
Break some records. Unveiling the Title & First Look of #LegendSaravanan's #TheLegendNewSaravanaStoresProduction's No.1 starring #LegendSaravanan THIS FRIDAY at 9:55 AM@jdjeryofficial @Jharrisjayaraj @VelrajR @Vairamuthu @AntonyLRuben pic.twitter.com/Ia5uKWxzrY

— Nikil Murukan (@onlynikil) March 2, 2022