இந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமையாக திகழும் “கலைஞானி” உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. உலக நாயகனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களில் விக்ரம் படத்தில் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாத விக்ரம் திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளனர்.

முன்னதாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 15ஆம் தேதி) விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த வரிசையில் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடித்திருக்கும் தி லெஜண்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வருகிற மே 29-ம் தேதி தி லெஜண்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

We are super thrilled to announce that the grand audio & trailer launch 🚀 of #TheLegend is all set to happen on 29th May 2022, 6️⃣PM onwards at Jawaharlal Nehru Indoor Stadium

Stay tuned for a memorable night 💥

A @jdjeryofficial directorial
A @Jharrisjayaraj musical 🎶 pic.twitter.com/eIK1QBZvfq

— Think Music (@thinkmusicindia) May 18, 2022