சமீப காலமாக திரைப்பிரபலங்கள் தற்கொலைக்கு ஆளாவது அதிர்ச்சியை அளிக்கிறது. ஆண்டுக்கொரு திரைப்பிரபலம் என்ற மோசமான நிலை தற்போது வந்துவிட்டது. இந்தியாவையே உலுக்கிய பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு மூன்று ஆண்டு காலம் முடிந்தும் இன்னும் தீர்வு கிடைக்காமல் உள்ளது. அவரது இழப்பை இன்றும் ரசிகர்கள் வருந்தி வருகின்றனர். அதே போல் இங்கு தமிழ் நாட்டில் சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையும் புரியாத புதிராகவே உள்ளது. திரையில் ஜொலித்து ஒரு இடத்தை அடைந்தவர்கள் இப்படி தங்கள் வாழ்வை முடித்துகொள்வது சமூகத்தில் தவறான எடுத்துக் காட்டாக மாறி வருகிறது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுதீர் வர்மாவின் உடலை போலீஸார்‌ மீட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் எதற்காக தற்கொலை செய்தார் அதற்கான பின்னணி என்ன என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 33 வயதே ஆன சுதீர் வர்மாவின் இழப்பு தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது.

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்த நடிகர் சுதீர் வர்மாவிற்கு சமீபத்தில் சினிமா வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு இப்படி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் போலீஸார் சுதீர் வர்மாவுடன் பணியாற்றியவர்களிடமும் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்திரனருடனும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சுதீர் மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபல இயக்குனர் வெங்கி குடுமுலா தனது ட்விட்டர் பக்கத்தில், “சில நேரம் இனிமையான புன்னகைக்கு ஆழ்ந்த சோகம் மறைந்திருக்கும். பிறர் வாழ்வில் என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியாது. தயவு செய்து அனைவரிடமும் கருணையுடன் அன்பாக இருங்கள்..Miss you சுதீர்.. நீ இதை செய்திருக்க தேவையில்லை.. உன் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது ரசிகர்கள் மற்றும் பலர் இணையத்தில் சுதீர் வர்மாவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 2010 ல் துணை நடிகராக திரை துறைக்கு வந்த சுதீர் வர்மா தற்போது இளம் நடிகராக அனைவருக்கும் பரிசையமானவருமாய் தற்போது தெலுங்கு திரைத்துறையில் வலம் வந்தவர். இவர் குண்டனப்பு பொம்மா, செகண்ட் ஹாண்டு, ஷூட் அவுட் அட் அலேரு போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.