இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து முன்ன்ணி மொழிகளிலும் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் RRR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரேயா, த்ரிஷ்யம் 2 படத்தின் ஹிந்தி ரீமேக், நடிகர் பிரகாஷ்ராஜின் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகியிருக்கும் தட்கா மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நரகாசுரன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் அடுத்ததாக கன்னடத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் கப்ஸா திரைப்படத்தில் ஸ்ரேயா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கன்னட சினிமாவின் ரியல் ஸ்டார் உபேந்திரா மற்றும் நடிகர் கிச்சா சுதீப் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கப்ஸா திரைப்படத்தை இயக்குனர் R.சந்துரு எழுதி இயக்கியுள்ளார்.

ஸ்ரீ சித்தேஸ்வரா என்டர்பிரைசஸ் தயாரித்துள்ள கஸ்பா திரைப்படத்தில் ஜகபதி பாபு, ராகுல் தேவ், கபீர் துகான் சிங், பிரதீப் ராவத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜே செட்டி ஒளிப்பதிவு செய்துள்ள கப்சா படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஒரியா, மராத்தி என ஏழு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ள கப்ஸா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயாவின் "ராணி" மதுமதி கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

Unveiling the first look of our 1’st queen..Welcoming Shirya Saran aboard.. happy to have you on set @shriya1109 💐✨#Kabzaa#Indianrealstarupendra#KichchaSudeepa#Rchandru#ShriyaSaran#Panindiamoviekabzaa pic.twitter.com/vP2z6eW81i

— R.Chandru (@rchandru_movies) March 7, 2022