இதுவரை இந்திய திரையுலகில் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் படைத்த அத்தனை வசூல் சாதனைகளையும் அடித்து துவம்சம் செய்து வருகிறது கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம். ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாகவும் காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாகவும் மாஸாகவும் படமாக்கப்பட்டுள்ள கேஜிஎஃப் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யஷ் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.

அடுத்து வரும் வாரங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் வெற்றி நடை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக கன்னட சினிமாவில் இருந்து ஒரு திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரிலீசானது மட்டுமல்லாமல் உலக அளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய ஐபிஎல் 2022 மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சி ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படம் இதோ…

KGF Chapter 2 Special Premiere at the RCB Bio Bubble tonight & we’re all set for the blockbuster! Here’s a sneak peek. More to follow…@hombalefilms @TheNameIsYash @VKiragandur @prashanth_neel @ChaluveG @duttsanjay @TandonRaveena #RCB #ನಮ್ಮRCB #RCBxHombale #KGF2 #KGFChapter2 pic.twitter.com/uQAha67NaW

— Royal Challengers Bangalore (@RCBTweets) April 17, 2022