கள்ளக் காதல் மோகத்தால் 6 பேரைக் கொன்ற பெண் ..14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்த ஜூலி தாமஸ், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு, பெற்றோரின் கட்டாயத்தால் ராய் தாமஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு, ஜூலிக்கு கணவரைப் பிடிக்காத நிலையில், கணவரின் அண்ணன் மகன்
சாஜூவை கள்ளத் தனமாக ரசிக்கவும், காதலிக்கவும் தொடங்கினார். இதனையடுத்து, இந்த கள்ளக் காதலை நிரந்தரமாக்க, இருவரும் தங்கள் குடும்பத்தினரை என்ன செய்யலாம் என்று யோசித்து புதிதாக திட்டம் போட்டனர்.

கள்ளக் காதலனையும் திருமணம் செய்ய வேண்டும், கணவனின் சொத்தும் தனக்கு அப்படியே வேண்டும் என்று கணக்குப் போட்டு, கணவரின் குடும்பத்தினரை விசம் வைத்துக் கொன்று விடலாம் என்று திட்டம் போட்டுள்ளனர். அதே நேரத்தில், ஒரே நேரத்தில் அனைவரையும் கொலை செய்தால், தன்மீது சந்தேகம் வரும் என யோசித்த ஜூலி, கால இடைவேளை விட்டு ஒவ்வொருவரையும் கொலை செய்ய முடிவு செய்தார்.

மாமியார் குடும்பத்தில் அனைவரும் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு மட்டன் சூப் குடிப்பது வழக்கம். அதனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தனது நண்பர் சாஜூவிடம் இருந்து சயனைடை வாங்கி வைத்துக்கொண்டார்.

அதன்படி கடந்த 2002 ஆம் ஆண்டு, தனது மாமியார் அன்னம்மா குடிக்கும் மட்டன் சூப்பில் அதைக் கலந்துகொடுத்துள்ளார். அதைக் குடித்த அவரும் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு, மாமனார் டாம் தாமஸைக் கொலை செய்தார். 2011 ஆம் அண்டு கணவர் ராய் தாமஸையும் அதேபோல் விசம் வைத்து கொலை செய்துள்ளார்.

ஜூலியின் நடவடிக்கையில் அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவுக்கு சந்தேகம் வரவே, அவரையும் 2014 ஆம் ஆண்டு இதேபோல் கொலை செய்துள்ளார். தன் கணவர் வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்ததும், கள்ளக் காதலன் சாஜூவின் மனைவி சிலி, அவருடைய 10 மாத குழந்தையும் இதே போல், 2016ஆம் ஆண்டு தீர்த்துக் கட்டியுள்ளார்.

ஜூலி - சாஜூ இருவரும் திட்டமிட்டபடி தங்கள் குடும்பத்தினரைக் கொலை செய்ததும், அடுத்த ஓராண்டுக்குள் இருவரும் முறைப்படி 2 வது திருமணம் செய்துகொண்டனர். அதுபோல், தங்கள் திட்டமிட்டதைப் போல், கணவரின் சொத்தையும் தங்கள் பெயர்களில் மாற்றிக்கொண்டனர். இதனால் சந்தேகம் அடைந்த ஜூலியின் முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரர், தனது குடும்ப உறுப்பினர்களின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜூலி - சாஜூ இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில், 6 பேரையும் விசயம் வைத்துக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜூலி, சாஜூ மற்றும் ஜூலியின் ஆண் நண்பர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.