ஆகச் சிறந்த நடிகையாக தொடர்ந்து வித்தியாசமான கதை காலங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாமி காகிதம் மற்றும் திருவாரூர் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

முன்னதாக வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி உடன் இணைந்து போலா ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைபுபுயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த வரிசையில் அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து மலையாளத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் வாஷி. ஜி.சுரேஷ் குமார் தயாரிப்பில், மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து வாஷி திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இயக்குனர் விஷ்ணு.ஜி.ராகவ் இயக்கியுள்ள வாஷி திரைப்படத்திற்கு ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 17ஆம் தேதி வாஷி திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் வாஷி திரைப்படத்தின் டீசர் நாளை மே 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

A post shared by Revathy Kalamandirr (@revathy_kalamandirr)