தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருது வாங்கிகொடுத்தது.தீபாவளிக்கு வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இதனை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரிப்பாட்டா,சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் வேதாளம் ரீமேக் உள்ளிட்ட சில முன்னணி படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி.இதனை தவிர சாணி காயிதம்,குட்லக் சகி உள்ளிட்ட தனி ஹீரோயின் படங்களிலும் நடித்துள்ளார் கீர்த்தி.

இவர் சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவற்றை தவிர மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் வாஷி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.இந்த படத்தினை மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தினை விஷ்ணு ஜி ராகவ் இயக்கியுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.விரைவில் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

And it’s a wrap at Vaashi !
Super happy to have joined hands with buddy #vishnuraghav in his first venture as director. I wish the world for you brother ! And thanks to the amazing Co-star @KeerthyOfficial and the cast and crew for making #Vaashi most memorable 😊 pic.twitter.com/UqBD34x4vF

— Tovino Thomas (@ttovino) January 20, 2022