தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக உயர்ந்து நிற்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா படத்திலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து வேதாளம் தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர் படத்திலும் நடித்து வருகிறார்.

முன்னதாக கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள குட் லக் சகி வருகிற நவம்பர் 26-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

மேலும் இயக்குனர் செல்வராகவன் முதல் முறை கதாநாயகனாக நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

வாஷி எனும் இந்த புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடிக்கின்றனர். ஜி.சுரேஷ் குமார் தயாரிப்பில், மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து தயாரிக்க, விஷ்ணு.ஜி.ராகவ் எழுதி இயக்கும் வாஷி படத்திற்கு, ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைக்கிறார். பூஜையுடன் தொடங்கப்பட்ட கீர்த்தி சுரேஷின் வாஷி படபூஜை புகைப்படங்கள் இதோ…

Here's a glimpse of my upcoming Malyalam project's pooja - Vaashi, a Revathy Kalamandirr Production. ❤️🙌🏻 #Vaashi pic.twitter.com/kQschf9MI8

— Keerthy Suresh (@KeerthyOfficial) November 17, 2021