தனக்கென தனி ஸ்டைலில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நாயகியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டில் தெலுங்கில் குட் லக் சகி & சர்க்காரு வாரி பாட்டா தமிழில் சாணிக் காயிதம் மற்றும் மலையாளத்தில் வாஷி உள்ளிட்ட திரைப்படங்கள் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

மேலும் 2023ஆம் ஆண்டிலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக கேஜிஎஃப் & காந்தாரா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS தயாரிக்க, இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து ஜெயம் ரவியின் சைரன் மற்றும் நானியின் தசரா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் ஆகியோருடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் வேதாளம் படத்தின் ரீமேக்காக தயாராகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மாமன்னன் படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் போலா ஷங்கர் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக தளபதி விஜயின் மேலாளரான ஜெகதீஷின் The Route மற்றும் சுதன் சுந்தரமின் Passion Studios இணைந்து வழங்கும் புதிய அதிரடி ஆக்சன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

தமிழில் சூப்பர் ஹிட்டான கிளாசிக் திரைப்படமான ரிவால்வர் ரீட்டா என்ற டைட்டிலில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகும் இப்படத்தை இயக்குனர் K.சந்துரு எழுதி இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்கிறார். கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை NETFLIX நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…