பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.

பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளனர்.தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் அக்டோபர் மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Time to see the most exciting and expected movie in theatres @ october. We are glad to inform our distribution movie got certified U/A@lightson_media
@onlynikil @Kavin_m_0431 @Actor_Amritha @thinkmusicindia @EkaaEntertainm1 pic.twitter.com/fECVCk1WkB

— LIBRA Productions (@LIBRAProduc) September 8, 2021