மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிய நடிகர் கதிர் அடுத்து நடித்த கிருமி திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து விக்ரம் வேதா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கதிர், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மெகா ஹிட்டானதோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது.

மேலும் தளபதி விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கதிர் நடிப்பில் கடைசியாக சர்பத் திரைப்படம் வெளிவந்தது. இதனையடுத்து மீண்டும் கல்லூரி மாணவனாக நடிகர் கதிர் நடிக்கும் திரைப்படம் இயல்வது கரவேல். இயக்குனர் S.L.S.ஹென்றி எழுதி இயக்கும் இயல்வது கரவேல் திரைப்படத்தை EMINENT ENTERTAINMENT நிறுவனம் சார்பில் டேனியல் கிறிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

சென்னையில் உள்ள பழமை வாய்ந்த கல்லூரியில் நடைபெறும் காதல் மற்றும் மாணவர்கள் இடையிலான அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்படும் இப்படத்தில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை யுவலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், கரு.பழனியப்பன், ஆடுகளம் நரேன், ஸ்மைல் சேட்டை அன்புதாசன் மற்றும் லகுபரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் இயல்வது கரவேல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The pooja of #EminentEntertainment's 'Production No 1' - #IyalvathuKaravel was held today! @am_kathir @Actor_Mahendran @iamYuvalatchumi @karupalaniappan

Director :@slshenry @GhibranOfficial musical @Sridhar_DOP @V4umedia_ pic.twitter.com/FNJ91z1wQl

— RIAZ K AHMED (@RIAZtheboss) March 2, 2022