தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கதிர்.சமீபத்தில் வெளியான விஜயின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இது தவிர ஜடா,சர்பத் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.



ஜடா படத்தை குமரன் இயக்கியுள்ளார்.ரோஷினி பிரகாஷ் இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.



இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று படக்குழுவினர் பதிவிட்டுள்னர்.

@SamCSmusic He is the best and promising musician, got Stunned seeing his work in live.. Feeling happy that I had worked with bro ♥️.. thanks a lot for giving a soul to #Jada bro ..#Jada #BgmRecording @am_kathir @im_gowthamoffl ♥️ pic.twitter.com/7niS02Js51

— Kumaran (@DirKumaran) November 2, 2019