படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளத்தையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் சிறந்த நடிகரான கார்த்தி அடுத்ததாக, இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.அடுத்ததாக நடிகர் கார்த்தி கொம்பன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் முத்தையா எழுதி இயக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு உரிமை என பெயரிடப்பட்டுள்ளது

இத்திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் மேலும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையில் தயாராகும் விருமன் திரைப்படம் இன்று பூஜையோடு தொடங்கப்பட்டது. இதில் இயக்குனர் பாலா இயக்குனர் ஷங்கர் சூர்யா கார்த்தி இயக்குனர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விருமன் படபூஜை புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ...

Happy to have started our next Production titled #Viruman with an auspicious Poojai today 🪔@Karthi_Offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @Suriya_offl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial @selvakumarskdop @ActionAnlarasu @jacki_art @U1Records pic.twitter.com/M4ijxNTEQB

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 6, 2021