எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளனர்.கமல் போன்ற ஒரு நடிகர் லோகேஷ் போன்ற ஒரு இளம் இயக்குனருடன் இணைவதால் அறிவிப்பு முதலே பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது இந்த படம்.

அந்த எதிர்பார்ப்பை கூட்டும்விதமாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக வர படத்தின் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டது.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 15ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு ஒரு புதிய போஸ்ட்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.செம மாஸான இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Get ready for the #Vikram Audio and Trailer from May 15 🔥#KamalHaasan#VikraminAction #VikramAudioLaunch #VikramTrailer @ikamalhaasan @anirudhofficial @Udhaystalin @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/DcQ5CjgpuF

— Raaj Kamal Films International (@RKFI) May 13, 2022