மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி படத்தினை இயக்கினார்.

இந்த படமும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.வளர்ந்து வரும் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக தவிர்க்க முடியாத ஒரு இடத்தினை பிடித்தார் லோகேஷ்.அடுத்ததாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தினை இயக்கினார்.இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் லோகேஷ்.

மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ்.ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.ஃபஹத் பாசில்,விஜய்சேதுபதி,நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

RKFI and Red Giant Movies will together set TN screens on fire from June 3! #VikramFromJune3 #Ulaganayagan #KamalHaasan #Aarambikalangala @ikamalhaasan @Udhaystalin @Dir_Lokesh @RedGiantMovies_ @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @anirudhofficial @turmericmediaTM pic.twitter.com/pegDkQaOTc

— Raaj Kamal Films International (@RKFI) March 30, 2022