விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் மலர் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்று நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.பல மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி தமிழில் அறிமுகம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது.

முதல் மூன்று சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள்,படங்கள்,சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து கொரோனா வர நான்காவது சீசன் பிக்பாஸ் தள்ளிப்போனது.ஒருவழியாக சில மாதங்களுக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் தொடரின் ஐந்தாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பிரியங்கா,இமான்,சிபி,பவானி ரெட்டி,வருண்,நிரூப்,தாமரை செல்வி,அபிஷேக் ராஜா என 18 போட்டியாளர்களுடன் இந்த போட்டி தொடங்கியது,சில எலிமினேஷன்கள் கடந்து விறுவிறுப்பான கட்டத்தில் நகர்ந்து வருகிறது.

50 நாட்கள் கடந்து இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் கடந்த வாரம் தொகுத்து வழங்கினார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட கமல் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.மருத்துமனையில் இருந்து நேரடியாக பிக்பாஸ் செட்டிற்கு சென்று அதன் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.இன்றைய ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ஷூட்டிங்கை தொடங்கியுள்ள கமலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர.

#BiggBossTamil இல் இன்று.. #Day62 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/F5o6htM80O

— Vijay Television (@vijaytelevision) December 4, 2021