மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று குலதெய்வம்.பெரிய ஹிட் அடித்த இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஸ்ரீப்ரியா இளையராஜா.

அடுத்தாக திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடரான கல்யாண வீடு தொடரில் ரோஜா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் ஸ்ரீப்ரியா இளையராஜா.இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவற்றை தவிர சில சூப்பர்ஹிட் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ஸ்ரீப்ரியா இளையராஜா.பிள்ளை பாண்டி,வேட்டை நாய் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் ஸ்ரீப்ரியா இளையராஜா.இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார் ஸ்ரீப்ரியா.

தற்போது இவருக்கு கடந்த நவம்பர் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார் ஸ்ரீப்ரியா.புதுமண தம்பதிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by S R E E P R I Y A (@sreepriya_ilayaraja)