தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விமல் ஆரம்பகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்து வெளிவந்த களவாணி படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்தார்.

அடுத்தடுத்து தூங்காநகரம், எத்தன், வாகை சூடவா, கலகலப்பு, தேசிங்குராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா என விமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு சமீப காலமாக விமல் நடிப்பில் வெளிவந்த கடைசி சில திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

முன்னதாக விமல் நடிப்பில் எங்க பாட்டன் சொத்து, சண்டக்காரி, மஞ்சள் குடை, குலசாமி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகிவரும் நிலையில், தற்போது விலங்கு என பெயரிடப்பட்டுள்ள புதிய வெப் சீரிஸில் விமல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஜீவி பிரகாஷ் குமார் நடித்த புரூஸ் லீ படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் விலங்கு வெப்சீரிஸை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மதன் தயாரித்துள்ள விலங்கு வெப்சீரிஸில் விமலுடன் இணைந்து இனியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பாலசரவணன் & முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவில், கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ள விலங்கு வெப்சீரிஸுக்கு ஆஜீஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் விலங்கு வெப் சீரீஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட மிரட்டலான அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

A captivating investigative drama is coming your way! Here is the first Look of ZEE5's new Series #Vilangu

Best wishes@ActorVemal anna @p_santh @madan2791 sir @Bala_actor @IamIneya @DKP_DOP @ajesh_ashok @thecutsmaker
👍

Premieres on 18th February on@ZEE5Tamil #EscapeArtists pic.twitter.com/GFVfmeGpha

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 1, 2022