உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி 2001ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியடைந்த திரைப்படம் இந்தியன்.இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.இரட்டை வேடங்களில் கமல் நடித்து அசத்திய இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

20 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியது.இந்தியன் 2 படத்தினை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வந்தனர்.காஜல் அகர்வால்,சித்தார்த்,ப்ரியா பவானி ஷங்கர்,ரகுல் ப்ரீத்,பாபி சிம்ஹா என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.அனிருத் இந்த படத்திற்கு இசைமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தடைபட்டது.இந்த படத்தின் ஷூட்டிங் சில வருடங்களாக தடைப்பட்டிருந்தது,விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் லைகாவுடன் இணைந்து இந்த படத்தினை தொடர்ந்து தயாரிக்கவுள்ளனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

வெகு நாட்களாக தள்ளிப்போன இந்த படத்தின் ஷூட்டிங் வெகு விரைவில் தொடங்கவுள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு லைவில் இந்தியன் 2 ஷூட்டிங்கில் செப்டம்பர் 13ஆம் தேதி இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதன் மூலம் படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது என்பதை உறுதிசெய்துள்ளார்.பலமுறை தள்ளிப்போன பட ஷூட்டிங் விரைவில் தொடங்குவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Finally she said 🥳

Waiting for #Vikram Entry 💥

" I am going to resume shooting for INDIAN 2 from 13th September "@MsKajalAggarwal#Indian2
#KajalAggarwal #KamalHassan pic.twitter.com/B4ShmdNi4T

— Esh Vishal (@Eshvishaloff) August 4, 2022