இந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை காஜல் அகர்வால் முதலில் பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து தெலுங்கில் லக்ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் காலடி எடுத்து வைத்த காஜல் அகர்வால் தொடர்ந்து தமிழில் பழனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதனை அடுத்து கடந்த 14 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோஸ்டி. பிரபுதேவாவின் குலேபகாவலி, ஜோதிகாவின் ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் அட்டகாசமான ஹாரர் காமெடி திரைப்படமாக வெளிவந்த கோஸ்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த ஹாரர் திரைப்படமாக காஜல் அகர்வால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் கருங்காப்பியம். காஜல் அகர்வால் ரெஜினா கெசண்ட்ரா, ஜனனி ஐயர் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த கருங்காப்பியம் திரைப்படம் நிறைவடைந்த ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. முன்னதாக பாலிவுட்டில் உமா என்னும் திரைப்படம் காஜல் அகர்வால் நடிப்பில் விரைவில் ரிலீஸாக தயாராகி வரும் நிலையில் அடுத்ததாக தற்போது இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நந்தாமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் அதிரடியான #NBK108 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகிறார். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் கடந்த 2022 ஆம் ஆண்டு பிறந்தது. இந்தக் குழந்தைக்கு நீல் கிட்சுலு என பெயரிடப்பட்டது. இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலின் செல்ல மகன் நீல் கிட்சுலு தற்போது தனது முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை காஜல் அகர்வாலின் குடும்பத்தினர் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். காஜல் அகர்வாலின் குடும்பத்தில் இருக்கும் அத்தனை உறவினர்களும் காஜல் அகர்வாலின் மகன் நீல் கிச்சலு தங்களுக்கு என்ன உறவு முறை என்பதை குறிக்கும் வகையிலான ஸ்பெஷல் டீ சர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…