இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர இயக்குனராக பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரட் இயக்குனராக திகழும் இயக்குனர் ஷங்கர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்த 2.O படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்ததை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2 மற்றும் RC15 திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
முன்னதாக இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்பட்டு சில காரணங்களால் தடைபட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ராம் சரணுடன் RC15 திரைப்படத்தை தொடங்கினார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் தடைகள் அனைத்தும் தற்போது நீங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கிறார்.
இதனிடையே நடிகை காஜல் அகர்வால் இந்தியன் திரைப்படத்திற்காக பிரத்யேகமாக களரி பயிற்சி எடுத்து வருகிறார். முன்னதாக குதிரையேற்றம் பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்ட காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்திற்காக களரி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…