சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அரவிந்த் சுவாமி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து மௌன திரைப்படமான காந்தி டாக்ஸ் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் வருகிற ஜூன் 24ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

மேலும் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபர்ஸி வெப் சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா & சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…