ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் மக்கள் செல்வனாக இடம் பிடித்ததோடு தற்போது இந்திய திரை உலகின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

முன்னதாக பாலிவுட்டில் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் புதிய வெப் சீரிஸில் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தொடர்ந்து பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனிடையே இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் வருகிற ஜூன் 24ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா & சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த வகையில் சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கமான ரோகினி சில்வர் ஸ்கிரீன் திரையரங்கில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கான 2000 டிக்கெட்டுகள் முன்பதிவு விற்று தீர்ந்துள்ளதாகவும், விஜய்சேதுபதியின் திரைப்படங்களிலேயே முதல் முறையாக ரிலீசுக்கு முன்பு அதிகம் முன்பதிவு நடைபெற்ற உள்ளதாகவும் திரையரங்கு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

More than 2000 tickets sold for #KaathuvaakulaRenduKaadhal #KRKonApril28 within 24 hours of opening bookings. Going to be VJS’ biggest opener (solo release) @RohiniSilverScr

— Nikilesh Surya 🇮🇳 (@NikileshSurya) April 25, 2022