தமிழ் சினிமாவில் எழுத்தாளராக அறிமுகமாகி பின் மிக முக்கியமான திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் மணிகண்டன். பின் கடந்த 2021 ல் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டு மொத்த திரையுலகினரையும் தன் நடிப்பினால் வியப்பில் ஆழ்த்தி கவனம் பெற்றா நடிகர் மணிகண்டன். அதன்பின் திரைப்படங்களில் நடிகராகவும் எழுத்தாளராகவும் பல வாய்புகள் மணிகண்டனுக்கு குவிய தொடங்கியது. அதன்படி மணிகண்டன் நெற்றிக்கண், ஏலே, சில நேரங்களில் சில மனிதர்கள் என்று பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மில்லியன் டாலர் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘குட்நைட்’. படத்தின் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் எழுத்தாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மணிகண்டன் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் - பக்ஸ், இயக்குனர் பாலாஜி சக்தி வேல், ரெபேக்கா, உள்ளிட்டோர் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

குறட்டையால் குடும்பத்திற்குள் வரும் பிரச்சனைகளை பற்றி பேசும் படமாக உருவான குட்நைட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்று கடந்த மே மாதம் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நகைச்சுவையுடன் வாழ்வியலின் எதார்த்தை பேசி பீல் குட் திரைப்படமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குட் நைட் திரைப்படம். ஆரபாட்டமின்றி வெளியான குட் நைட் திரைப்படத்திற்கு தமிழமெங்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வெற்றி திரைப்படமாக மாற்றினர்.

இந்நிலையில் குட்நைட் படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ‘நான் காலி’ பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. குறட்டை வாழ்கை இருந்தாலும் காதலுடன் மணிகண்டன் செய்யும் செட்டைகளின் தொகுப்பாக வெளியாகியுள்ளது குட் நைட் படத்தின் நான் காலி பாடலின் வீடியோ. பாடலாசிரியர் மோகன் ராஜன் வரிகளின் ஷான் ரோல்டன் இப்பாடலை பாடி இசையமைத்துள்ளார். ஆடியோவாக ரசிகர்களிடம் டிரெண்ட் ஆன நான் காலி பாடல் தற்போது வீடியோவாக ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.