சின்னத்திரையில் முன்னணி மெகா தொடர்களில் நடிகராகவும் பின்னர் விஜய் டிவியின் தொகுப்பாளராகவும் பணியாற்றிய கவின் தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து வெள்ளித்திரையிலும் சத்ரியன் & நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக கவின் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஆகாஷ் வாணி வெப் சீரிஸும் பலரது கவனத்தை ஈர்த்தது.நடிகராக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வரும் கவின் தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ஊர்க்குருவி படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இதனிடையே ஒலிம்பியா மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் ச.அம்பேத் குமார் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் கணேஷ்.கே.பாபு எழுதி இயக்கும் இப்படத்தில் கவின்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.

எழிலரசு ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. மோனிகா சின்னகொட்லா, ஹரிஷ் குமார் மற்றும் பிரதீப் அண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இப்படத்தின் ஷூட்டிங் தற்போது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே பாக்யராஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா இருவரும் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இருவரும் படப்பிடிப்பில் இணைந்துள்ள புகைப்படம் தற்போது வெளியானது. அந்த புகைப்படம் இதோ…

After thirty years today, @OlympiaMovies is happy to renuite @ungalKBhagyaraj sir and Aishwarya ma'am together on screen for Production No.4 @ambethkumarmla @Kavin_m_0431 @ganeshkbabu @aparnaDasss @APVMaran @donechannel1 pic.twitter.com/OSiSXmFkxE

— Done Channel (@DoneChannel1) March 23, 2022