.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ப்ரட்ரிக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

.

பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஃபர்ஸ்ட்லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

.

இந்த படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக செகண்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர்.

She is fierce and unstoppable... Here's #PMV2ndLook for you! #HappyWomensDay2020#PonmagalVandhal#Jyotika #KBhagyaraj @rparthiepan #Thiagarajan #PratapPothen #Pandiarajan @Suriya_offl @rajsekarpandian @fredrickjj @govind_vasantha @Lyricist_Vivek @SakthiFilmFctry pic.twitter.com/QR93TBJVOS

.
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 8, 2020