தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்த அதிரடி படமாக தயாராகி வரும் தேவரா திரைப்படத்தின் முக்கிய ஸ்டண்ட் காட்சி குறித்த ருசிகர தகவல்களை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பகிர்ந்து கொண்டார்.தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் RRR. பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த RRR திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைத்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ஒரு திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. முன்னதாக சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் சந்திப்பு நடைபெற்றதாகவும் இதில் இயக்குனர் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆருக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த வரிசையில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் தான் தேவரா. ஜூனியர் என்டிஆர் தனது திரைப் பயணத்தில் 30-வது திரைப்படமாக தயாராகும் தேவரா படத்தில் தற்போது கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்த ஆச்சார்யா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அடுத்ததாக தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்தை இயக்குகிறார். பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மிரட்டலான வில்லனாக நடிக்கும் தேவரா படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த் பிரகாஷ்ராஜ் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கலையரசன் மற்றும் நரேன் உள்ளிட்ட ஒரு முக்கிய இடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவில் ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய இருக்கும் தேவரா படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். என் டி ஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவாசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் தேவரா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது தேவராத் திரைப்படத்தின் முக்கிய ஸ்டாண்ட் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு குறித்து ஒளிப்பதிவாளர் ரத்னவேலு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். “சுவாரஸ்யமான NIGHT EFFECT ஆக்ஷன் காட்சி ஒன்றை மிகவும் குறைவான வெளிச்சத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் படமாக்கி இருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். ஒளிப்பதிவாளர் ரத்னவேலு அவர்களின் அந்த பதிவு மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…