நடிகர் அஜித் குமாரை தனது வழிகாட்டி என குறிப்பிட்டு இந்த ஆசிரியர் தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார் பிரபல நடிகர் ஜான் கொக்கன். தனது திரைப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் அஜித் குமாரின் வீரம் சிலம்பரசன்.TRன் ஒஸ்தி என பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் ஜான் கொக்கன் பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரம்மாண்ட படைப்பான பாகுபலி திரைப்படத்தில் காலகேயர்களில் ஒருவராக நடித்து பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடிக்க, அதிரடியான திரைப்படமாக வெளிவந்து மெகா ஹிட்டாகி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த கேஜிஎஃப் திரைப்படத்தில் மிரட்டலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன், தமிழில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றார்.

தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக, இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமாருக்கு கதாநாயகனாக நடித்த ஆக்சன் என்டர்டைனிங் திரைப்படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான துணிவு திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் ஜான் கொக்கன் நடித்திருந்தார். அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க அதிரடியான பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து பல அதிரடியான திரைப்படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் ஜான் கொக்கன் தொடர்ந்து நடித்து வருகிறார். முன்னதாக துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகர் ஜான் கொக்கன் அவரோடு பழகி அவருடைய நட்பையும் பெற்றார். அதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதற்கு பாதுகாப்பான பிரத்யேகமான STUNT PROTECTION KIT ஒன்றை நடிகர் ஜான் கொக்கன் அவர்களுக்கு அஜித் குமார் பரிசளித்தார்.

தொடர்ந்து நடிகர் ஜான் கொக்கன் அவர்களின் திரைப்பயணத்திற்கும் வாழ்க்கை பயணத்திற்கும் முக்கிய வழிகாட்டியாக அஜித்குமார் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனக்கு வழிகாட்டியாக இருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஆசிரியர் தினத்தில் அவரை தனது வழிகாட்டி என குறிப்பிட்டு நடிகர் ஜான் கொக்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது அதற்காகத்தான் நம்மிடம் ஆசிரியர்களை கொடுத்திருக்கிறார். நமக்கான சரியான பாதையை ஒருவர் வழிகாட்டும் போது நமது வாழ்க்கையில் நாமும் வளருவோம் எனக்கு மட்டுமல்லாமல் இன்னும் லட்சக்கணக்கானோருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு நன்றி. என் வாழ்க்கைக்குள் வந்ததற்கும் அதை இன்னும் சிறப்பாக மாற்றியதற்கும் நன்றி அஜித் குமார் சார். என் எல்லைகளை கடந்து நான் செல்வதற்கு என்னை உந்தித் தள்ளியதற்கு நன்றி அஜித் குமார் சார். உங்களுடைய அன்பிற்கும் கனிவான பண்புக்கும் நான் என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன். கடவுள் உங்கள் உடன் இருக்கட்டும் அளவற்ற ஆசீர்வாதங்கள் கொடுக்கட்டும்.” என பதிவிட்டு இருக்கிறார். நடிகர் ஜான் கொக்கனில் அந்த பதிவு இதோ