தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து சிறந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் இதயத்தில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. கடைசியாக தனது 25வது திரைப்படமாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸான பூமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

முன்னதாக எழுத்தாளர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய திரை உலகின் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் என்கிற அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு கோடை வெளியீடாக ரிலீசாக உள்ளது.

இதனிடையே ஜெயம்ரவியின் 28-வது திரைப்படமாக தயாராகி வரும் #JR28 புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (பிப்ரவரி 12ஆம் தேதி) வெளியானது. மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் உதவி இயக்குனரும் ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்தின் இயக்குனருமான இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் #JR28 திரைப்படத்திற்கு அகிலன் (King Of The Indian Ocean) என பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள அகிலன் திரைப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் & தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் உத்தமன் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அகிலன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அசத்தலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

#Agilan makes his entry! Happy to unveil the first look of our #JR28@actor_jayamravi @Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @RVijaimurugan @Pallavi_offl @skiran_kumar @harishuthaman @janichirajani @onlynikil @CtcMediaboy pic.twitter.com/rIkcvdX7wL

— Screen Scene (@Screensceneoffl) February 12, 2022