தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் ஜெய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குற்றமே குற்றம் திரைப்படம் இந்த ஆண்டு (2022) தமிழ் புத்தாண்டு வெளியீடாக கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ரிலீசானது. இதனையடுத்து ஜெய் நடிப்பில் வரிசையாக திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக பிரேக்கிங் நியூஸ் மற்றும் எண்ணித்துணிக என ஜெய் நடித்துள்ள திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக தயாராகி வரும் நிலையில், தற்போது இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் புதிய படத்திலும் கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் ஜீவாவுடன் இணைந்து இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் காஃபி வித் காதல் படத்திலும் நடிகர் ஜெய் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் ஜெய் மற்றும் சுந்தர்.C இணைந்து நடித்துள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. சைக்கோ திரில்லர் திரைப்படமாக இயக்குனர் பத்ரி நாராயணன் எழுதி இயக்கியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தை AVNI டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ளார். ஹனி ரோஸ் கதாநாயகியாக நடிக்க, இமான் அண்ணாச்சி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், நவநீத்.S இசையமைத்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்திற்கு ஃபின்னி ஆலிவர்.S படத்தொகுப்பு செய்துள்ளார். பட்டாம்பூச்சி திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் பட்டாம்பூச்சி திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…