ஈஷா மையத்தின் காவேரி கூக்குரல் இயக்கம் இந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 1.1 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டு இருக்கிறது. ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மரம் நடம் விழாக்களோடு இந்த பெரும் முயற்சியை தொடங்கியிருக்கின்றனர். இந்தக் காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் காவிரி வடிநீர் பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாய நிலங்களில் 242 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று ஒரு பெரும் திட்டத்தை கையில் எடுத்திருக்கின்றனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 36 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைபெற்றுள்ளன. இதில் 140 விவசாய நிலங்களில் 1.6 மரக்கன்றுகள் நடப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலை வேம்பு, மகாகனி, ரோஸ் வுட் போன்ற டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டிருக்கின்றனர். இந்த அத்தனை மரக்கன்றுகளையும் ஈஷா வெறும் மூன்று ரூபாய்க்கு வழங்கி இருக்கிறது. இந்த மரம் நடும் விழாவில் கட்சி பாகுபாடு இன்றி பல்வேறு கட்சிகளை சார்ந்த அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர்கள் தொழிலதிபர்கள் சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஈரோட்டில் நடைபெற்ற மரணொடு விழாவில் பேசிய மொடக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சி.சரஸ்வதி அவர்கள் பேசியபோது, “விவசாயிகளும் அதிக பயன்படுவார்கள் மற்ற பொது இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. நம்முடைய மண்ணும் செழிப்பாகிறது எனவே இந்தத் திட்டத்திற்காக சத்குரு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். அதேபோல் பொள்ளாச்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.சண்முகசுந்தரம் அவர்கள் பேசிய போது “ஈஷா அதிகப்படியான மரக்கன்றுகளை நடும் பல நிகழ்வுகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறார்கள்.” எனக் குறிப்பிட்டு இதற்காக காவேரி கூக்குரல் மற்றும் ஈஷா மையத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜூன் 5-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காவிரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாபெரும் மரம் நடுவிழா காவிரி கூக்குரல் இயக்கத்திற்கு ஒரு மைல்கல். இதே உத்வேகத்தோடு பல்வேறு சமூக நல ஆர்வலர்களின் உதவியோடும் எண்ணற்ற தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்போடும் செயல்பட இருக்கும் இந்த காவிரி கூக்குரல் இயக்கத்தின் முக்கிய முன்னெடுப்பான 1.1 கோடி மரக்கன்றுகளை தமிழ் நாடு முழுவதும் நடுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் வெற்றி அடைந்து தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரித்து காவேரி இன்னும் மேம்பட வேண்டும் என்றும் அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் மக்களும் தங்களது மனதளவில் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கின்றனர். ஈஷாவின் காவிரிக்கு குரல் இயக்கத்தின் முக்கிய முன்னெடுப்பான 1.1 கோடி மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம் பற்றிய விளக்கமான வீடியோ இதோ…