கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் விக்ரம் 58.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.படத்தின் ஒளிப்பதிவாளராக சிவகுமார் விஜயன் பணியாற்றவுள்ளார்.இந்த படத்தின் ப்ரீ-ப்ரோடுக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கவுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Proud and honoured to introduce @IrfanPathan in #ChiyaanVikram58 in a super stylish action avatar!! Welcome on Board Sir and Wish you a sensational debut👍🏻#IrfanPathan #BCCI@AjayGnanamuthu @Lalit_SevenScr @arrahman @sooriaruna @iamarunviswa @proyuvraaj @LokeshJey pic.twitter.com/mQTPVFPbU5

— Seven Screen Studio (@7screenstudio) October 14, 2019