டொயோட்டா கார் நிறுவனத்தின் இணை சேர்மேன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள லான்சன் டொயோட்டா கார் நிறுவனத்தின் சேர்மேனாக லங்கா லிங்கம் இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில், இணை சேர்மேனாக 50 வயதான ரீட்டா லங்கா லிங்கம் இருந்து வந்தார். நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் வசித்து வந்த இவர்களுக்கு, லிவாஸ் என்ற மகனும், லாவண்யா என்ற பெண்ணும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகப் பொருளாதார மந்த நிலை காரணமாக, ஆட்டோ மொபைல் துறைகளைப் பொருளாதார நலிவைச் சந்தித்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிசெய்யும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து கிளை லான்சன் டொயோட்டோ நிறுவனத்தின் மேலாளர்களுடன் ரீட்டா லங்கா லிங்கம், தொழில் நலிவு குறித்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த கூட்டத்தில், மேலாளர்களைக் கடுமையாக ரீட்டா திட்டியதாகத் தெரிகிறது. இதனால், கணவன் - மனைவி இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், கூட்டம் முடிந்து வீட்டிற்குச் சென்றபோது, மனைவி மட்டும் வீட்டிற்குள் சென்றுவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு, கணவனை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, கணவர் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை ரீட்டாவின் வீட்டுக்குச் சென்ற சூப்பர்வைசர், ரீட்டா தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார், இது தொடர்பா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.