தமிழ் சினிமாவில் 2006 ம் ஆண்டில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் இலியானா. அதே நேரத்தில் தெலுங்கு திரைத்துறையிலும் அறிமுகமானார். தமிழை விட தெலுங்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அதிகமாக இருக்க தெலுங்கு துறையை தேர்ந்தெடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின் பல வருடங்கள் கழித்து 2012 ல் சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படம் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் இலியானா அவர்களுக்கு நிறைய ரசிகர்கள் தமிழில் கிடைத்தனர். அதன்படி அதிகப்படியான வாய்புகள் தமிழில் கிடைத்தாலும் படங்கள் நடிக்காமல் இருந்தார் நடிகை இலியானா. காரணம் பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தது. இந்தியில் பல முக்கிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதே நேரத்தில் சில தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். இவர் கடைசியாக இந்தியில் தி பிக் புல் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் ‘அன்ஃபேர் அண்ட் லவ்லி’ என்ற படத்தில் நடித்து வந்தார். ஒல்லியான உடலமைப்பை கொண்டிருந்தாலும் அழகினாலும் அட்டகாசமான நடிப்பினை வெளிபடுத்தியும் தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகை இலியானா

நடிகை இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து வந்தார். சில காரணமாக அந்த காதல் முறிந்தது. அத்ன்பின்னர் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து எந்தவித கருத்தும் இலியானா தரப்பில் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது தனது இன்ச்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பாமாக இருப்பதாக ஒரு குழந்தை ஆடையை புகைப்படம் எடுத்தும் ‘அம்மா’ என்று பொறிக்கப்பட்ட செயின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதனுடன் "விரைவில்.. எனது அழகான குட்டி டார்லிங் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். திடீர் அறிவிப்பினால் ரசிகர்கள் இன்பதிர்சியில் உறைந்து போனார்கள். இது குறித்து ரசிகர்கள் திரைபிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தும் சிலர் திருமணம் ஆகாமல் கர்ப்பம் எப்படி என்று கேள்விகளை எழுப்பியும் வருகிறார். தற்போது இணையத்தில் இலியானா பதிவு மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.