இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் தளபதி விஜயின் நாளை மறுநாள் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் ரிலீஸ் ஆகிறது. லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து இருக்கிறது. அதிரடியான சண்டை காட்சிகள், ACTION PACKED சேசிங் காட்சிகள், மிரள வைக்கும் CG-ல் கழுதைப்புலி உடனான ஒரு மிரட்டலான சண்டைக் காட்சி என மொத்த படம் எப்படி இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் தெள்ளத் தெளிவாக காட்டி இருக்கிறது. இதனிடையே லியோ திரைப்படத்தின் மிரள வைக்கும் காட்சிகளில் ஒன்றாக ரசிகர்களுக்கு பக்கா ஆக்சன் ட்ரீட் ஆக வரவிருக்கும் கழுதைப்புலி காட்சியில் கழுதைப்புலிக்கு டூப் போட்ட பிரபல ஸ்டண்ட் கலைஞர் “கலை” நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ,பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் பேசும் போது,
"“நீங்கள் நிறைய பாடி டபுள் செய்திருப்பீர்கள் முதல் முறையாக ஒரு விலங்கிற்கு பாடி டபுள் செய்வது எவ்வளவு கடினமாக இருந்தது?”"- என கேட்டபோது, “விஜய் சார் உடைய படம் என்று அழைத்த உடனே சென்று விட்டேன்... ஒரு நாள் படப்பிடிப்பு இருக்கிறது வருகிறீர்களா என்று கூப்பிட்டார்கள். உடனே போனேன் எனக்கு அப்போது தெரியாது யார் படம் என்ன ஏது எதுவும் தெரியாது. கூப்பிடுகிறார்கள் நான் போய் நடித்துவிட்டு வருவோம் என்று தான் வந்தேன். அங்கே போய் பார்த்தால் இவர்கள் ஒரு ரூமில் செட்டப் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தார்கள். நான் போய் பார்த்துவிட்டு நான் என்ன செய்ய வேண்டுமோ செய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்து உதவியாளர்களிடம் யாருடைய படம் என்று கேட்டேன். விஜய் சார் படம் என்று சொன்னார்கள் விஜய் சார் படத்திற்கு எதற்கு கழுதைப்புலி எல்லாம் வரப்போகிறது என கேட்டேன். இல்ல ப்ரோ லோகேஷ் அண்ணா படம் தளபதி நடிக்கிறார் என்று சொன்னார்கள். தளபதி 67 படமா என்று கேட்டேன் ஆமாம் என்றார். “என்ன ப்ரோ சொல்கிறீர்கள்” என்றேன். ஏனென்றால் தளபதி 67 படம் என்றால் ஒரு கேங்ஸ்டர் படமாக தானே இருக்கும் இதில் ஏன் கழுதைப்புலி எல்லாம் வரப்போகிறது என்று இருந்தேன். இது நடந்தது போன வருடம் அவர்கள் காஷ்மீர் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு... அப்போது கூப்பிட்டு என்னிடம் இதை சொன்னார்கள். அதன் பிறகு நீங்களும் செல்போனில் கழுதைப்புலி பற்றி பாருங்கள் அதை பயிற்சி செய்து கொள்ளுங்கள் என சொன்னார்கள். கழுதைப்புலி எப்படி நடக்கும் ஓடும் நிற்கும் எல்லாமே பயிற்சி எடுக்க சொன்னார்கள். அதன் பிறகு நான் கிளம்பி வீட்டிற்கு வந்த பின் போன் செய்து அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் இருக்கும் என்று சொன்னார்கள். எனவே அப்போதிலிருந்தே யூட்யூபில் கழுதைப்புலி பற்றிய விவரங்களை பார்த்து தெரிந்து கொண்டு அதே மாதிரி நிற்பது நடப்பது ஓடுவது என எல்லாமே பயிற்சி எடுத்துக் கொண்டேன்.” என தெரிவித்துள்ளார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட அந்த முழு பேட்டி இதோ…