தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் நட்சத்திரங்களில் ஒருவராக தொடர்ந்து தனது பாடல்களாலும் படங்களாலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அந்த வகையில் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் தனது வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய வீடியோ ஒன்றை ஹிப் ஹாப் தமிழா ஆதி வெளியிட்டுள்ளார். சுயாதீன இசை கலைஞராக தனது பயணத்தை தொடங்கி அட்டகாசமான ராப் இசை கலைஞராக தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து இசையமைப்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் & இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

முன்னதாக தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக இரட்டை வேடங்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த அன்பறிவு திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக Disney+ Hotstar தளத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த புதிய திரைப்படமாக உருவாகும் PT Sir திரைப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார். சிலம்பரசன்.TR - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் PT Sir தயாராகி வருகிறது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகும் PT Sir திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் அடுத்த அசத்தலான படமாக வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் வீரன். மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த மின்னல் முரளி திரைப்படத்தை போல ஒரு வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக, மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் ARK.சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, வீரன் திரைப்படத்திற்கு மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட வருகிற ஜூன் 2ம் தேதி வீரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சிறுவர்களோடு இணைந்து 90ஸ் கிட்ஸ் ஃபேவரட் பம்பரம் விட்டு விளையாடிய ஹிப் ஹாப் தமிழா ஆதி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரெண்டாகும் அந்த வீடியோ இதோ…