இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்வாழ்க ஹேஷ்டேகுகள் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

'இந்தி தினம்' இன்று கொண்டாடப்படும் நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, இன்று தனது வாழ்த்து மடலை வெளியிட்டார். அதில், “இந்தியா என்பது பல மொழிகள் கொண்ட நாடு என்றாலும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் தான் முடியும். நாட்டில் இந்தி மொழியை உபயோகிப்பதற்கான தேவையை நாம் அதிகரிக்க வேண்டும்” என்று அமித்ஷா தெரிவித்திருந்தார்.

இந்த செய்திகள் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அதனால், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், அமித்ஷாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், இந்தி திணிப்புக்கு எதிராக #தமிழ்வாழ்க ஹேஷடேக் உருவாக்கி உள்ளனர். மேலும், #StopHindiImposition, #StopHindiImperialism ஆகிய ஹேஷ்டேகுகரளையும் உருவாக்கி உள்ளனர். தற்போது, இந்த ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

மேலும், இந்தி மொழிக்கு ஆதரவாகவும், மற்ற மொழிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சருக்கு பல்வேறு மொழியியல் வல்லுநர்களும் எதிர்க் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன், சமூக வலைத்தளத்திலும், இந்தி திணிப்பு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.