தமிழ் திரையுலகில் இதுவரை பெரிதும் பயன்படுத்தாத கதைக்களத்தை தேர்ந்தெடுத்து பி.ஸ்.மித்ரன் இயக்கிவரும் ஹீரோ படத்தில்,நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் வீடியோ கேமினை படக்குழுவினர் கூகுள் பிலேஸ்டோர் மற்றும் ஐஒஸ்-ல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கேம் வெளியீட்டை தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்பொழுது இந்த கேம்-ஐ சிவகார்த்திகேயன்,கல்யாணி பிரியன் ,இவானா மற்றும் நடனஇயக்குனர் சதிஷ் ஆகியோர் விளையாடும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

யுவனின் இசையில் வெளியான சிங்கள் ட்ராக் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நவம்பர் 29-ல் படத்தின் சேகென்ட் ட்ராக் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஹீரோ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளிவருவதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

Our stars @Siva_Kartikeyan @kalyanipriyan @dancersatz & @_Ivana_official are enjoying #PlayHero 🎮🔍❤️
Are you?

And guess what? We're not picking just one winner 🥳#Hero @Psmithran @akarjunofficial @AbhayDeol @george_dop @AntonyLRuben @InfinitMaze pic.twitter.com/zUw7wtp6jO

— KJR Studios (@kjr_studios) November 27, 2019