தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். மேலும் அவரது கடந்த சில படங்களான ‘டாக்டர்’. ‘டான்’ ஆகிய படங்களின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டிற்கு பிறகு திரையுலகில் அவருக்கான மவுசு அதிகரித்து விட்டது. தற்போது அவர் மண்டேலா பட இயக்குனர் அஷ்வின் மடோன் இயக்கத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முழு வேலையையும் முடித்து விட்டு சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து நீண்ட நாளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்து முடித்த திரைப்படம் ‘அயலான்’. ரவி குமார் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான Sci Fi திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஏலியன் முக்கிய கதாபாத்திரம் வகிப்பதால் அதற்கான கம்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான வேலைகள் முடிந்து தீபாவளி பண்டிகை விடுமுறை தினத்தையொட்டி இந்தியா மொழிகளில் உலகெங்கும் வெளியாகவுள்ளது. நிச்சயம் இந்த படம் சிவகார்த்திகேயனின் திரைப்படத்தில் முக்கிய படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிவகார்த்திகேயனின் 21 திரைப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் உடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் வேகமெடுக்கும் வேலையில் படத்திலிருந்து வேற லெவல் அப்டேட்டை பகிர்ந்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் 21 வது திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு முதல் முறையாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அட்டகாசமான மோஷன் போஸ்டருடன் அட்டகாசமான மியூசிக் சேர்த்து அறிவித்துள்ளனர். இதையடுத்து ரசிகர்களால் அதிகம் அந்த பதிவு பகிரப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அந்த பதிவினை ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து “கமல் ஹாசன் சார் மற்றும் சிவகார்த்திகேயன் உடன் வேலை பார்க்க ஆவலுடன் உள்ளேன்.. நிச்சயம் இது மிகப்பெரிய படமாக அமையும்.. இந்த கூட்டணிக்காக ஆவலுடன் உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Super excited to be working for @ikamalhaasan sir with @Siva_Kartikeyan 💫✨

This is going to be a banger 😉

Can’t wait to join the squad 💪 https://t.co/0eJbKfwXpU

— G.V.Prakash Kumar (@gvprakash) May 3, 2023

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் தற்போது மிக முக்கியமான படங்களில் இசையமைத்து வருகிறார். அதன்படி பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’, தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’, விஷாலின் ‘மார்க் ஆண்டனி’, கார்த்தியின் ‘ஜப்பான்’, ஜெயம் ரவியின் ‘சைரன்’ மற்றும் சூரரை போற்று இந்தி ரீமேக் என்று பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதன் வரிசையில் சிவகர்த்திகேயனின் 21 வது திரைப்படம் இணைந்துள்ளது ஜிவி பிரகாஷ் குமார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.