இந்த ஆண்டு துவக்கத்திலே தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெற்று வருகிறது. அதன்படி முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமு அமைந்தது. அந்த வரிசையில் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘வாத்தி’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. அதன்படி தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் படம் வெளியானது. மேலும் மலையாளம் , கன்னடம் , இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்ய்ப்பட்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்த இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் வா வாத்தி பாடல் தனுஷ் குரலில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. கல்வியின் முக்கியதுவத்தை உணர்த்தும் இப்படத்தில் தனுஷ் முதல் முதலில் ஆசிரியர் வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் இனைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, பாரதி ராஜா , சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, கென் கருணாஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 17 ம் வெளியாகி வாத்தி திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கான பகுதிகளில் மிகப்பெரிய வரவேற்புடன் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் இருக்கும் வாத்தி திரைப்படத்தை ரசிகர்கள் ஆரவராமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது படக்குழு வாத்தி திரைப்படத்தின் முதல் வார வசூலை அறிவித்துள்ளது அதன்படி, உலகளவில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் இதுவரை 75 கோடிக்கு மேல் வசூல் குவித்து வருகிறது. இந்த அறிவிப்பையடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் படக்குழுவின் அறிவிப்பை வைரலாக்கி வருகிறது. இதற்கு முன்னதாக படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி படத்தின் வசூல் குறித்து இவ்வாறு பேசியிருந்தார். “வாத்தி திரைப்படம் இதுவரை உலகளவில் 75 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. அதுவும் 8 நாட்களில் இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்.. நன்றி அனைவருக்கும்” என்றார். தனுஷ் முதல் முதலாக தெலுங்கில் நடிக்கும் படம் வாத்தி. நல்ல வரவேற்பை இதுவரை வாத்தி திரைப்படம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.