தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். எதார்த்தமான தனித்துவமான இசைகள் மூலம் மக்கள் மனதை கவர்ந்து மிகப்பெரிய உச்சம் தொட்டவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இன்று தென்னிந்தியாவில் பல மொழி படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது பான் இந்திய திரைப்படங்களான ‘தசரா, ‘புரோஜக்ட் கே ஆகியாவற்றிற்கு இசையமைத்து வருகிறார். மேலும் தமிழில் ஜிகர்தண்டா டபிள் எக்ஸ், வாழை ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மற்றும் அஜித் நடிக்கும் AK62 படத்திலும் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு அவரது திரைப்பயணம் குறித்து நிறைய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் இசை நிகழ்சிகளில் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை அரங்கேற்றுவது குறித்து கேட்கையில்,

அவர், “ஏற்கனவே மக்கள் கொண்டாடி தீர்த்த பாடலை நான் எனது வடிவத்தில் கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. உதாரணமாக தீ மேடைக்கு வந்தால் அவள் 'ரௌடி பேபி' பாடல் கூட முடியவில்லை.. அது தீ உடைய மிகப்பெரிய ஹிட் பாடல். அதனால் எனக்கு தீ அவருக்கு கொடுக்க ரௌடிபேபி வேறு ஒரு வடிவத்தை உருவாக்கி வைத்திருந்தேன். நான் யுவன் சாரையும் கேட்க வைத்தேன். என்னிடம் மிக பிரமாதமான ரௌடி பேபி பாடல் உள்ளது. அசலை விட என்னிடம் என் சாயலில் சேர்க்கப்பட்ட சில விஷயங்களும் உள்ளது. அசல் பாடலை முழுவதும் மாற்றாமல் என் சாயலை ரௌடி பேபி பாடலில் இணைத்துள்ளேன்.அனிருத் என் சிறந்த நண்பர். அவர் உலகத்தை அவர் இசையால் ஆண்டு கொண்டு இருக்கிறார். அவருடைய பாடல்களையும் நான் என் வடிவத்தில் மாற்றி வைத்துள்ளேன். மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று..இது தான் என் பழக்கம். இது எனக்கு இயற்கையாவே இருக்கு.. கடந்த 10 வருடங்களாக இது என் பழக்கமாக இருந்தது. எனக்கு இன்னும் இது போன்று செய்ய வேண்டும் என்று ஆசை. அதனால் தான் இதற்கு 'Sounds From South' என்று அழைக்கிறேன். சந்தோஷ் நாராயணன் லைவ் அது போன்றா இல்லாமல்.. நான் இந்த இசைகளை மக்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.” என்றார் சந்தோஷ் நாராயாணன்.

மேலும், அதனை தொடர்ந்து “எம்.எஸ்.வி பாடலையும் நான் என் வடிவில் மாற்றி வைத்துள்ளேன். காலா படத்தில் 'கண்ணம்மா' என்ற பாடல் உள்ளது. அந்த கண்ணம்மா பாடலை ஏன் கண்ணம்மா என்று அழைக்கிறேன்‌ என்றால்'கண்ணம்மா கனவில்லையா' எம் எஸ் வி சாருடைய பாடலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது.. அதில் அனந்து வடிவ பாடலும் உள்ளது. ஆனால் அது ரிலீஸாக வில்லை.. நான் எப்போதும் அனத்து அவரிடம் அழைத்து அந்த பாடலை பாடுங்கள் என்று கேட்பேன்.

அது ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருக்கும்..இதுபோல தான் எனக்கு பிடித்ததை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் மற்ற இசையமைப்பாளர்களின் பாடலை பாடுவதாக இல்லை. ஏனென்றால் இது என்னுடைய முதல் இசை நிகழ்ச்சி.. நான் என்னுடைய பாடல்களை கொடுத்து மக்கள் வரவேற்பை பார்க்க நினைக்கிறேன்.இது சிறந்த இசை நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்றார்

கடந்த 2018 ல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரி 2. திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் யுவன் சங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் டிரெண்ட் செய்து ஆல்பம் ஹிட் அடித்தது. அதில் முக்கியமான பாடல்களில் ஒன்று ‘ரௌடி பேபி. பாடல்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் வீடியோ சாங் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தியாவின் பிரபல நடன கலைஞரும் நடிகருமான பிரபு தேவா நடன வடிவமைப்பு செய்து தனுஷ் சாய் பல்லவி நடனமாடிய பாடல் இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனுஷுடன் இணைந்து பின்னணி பாடகி தீ இப்பாடலை பாடியிருப்பார். மேலும் இப்பாடலை தனுஷ் எழுதியிருப்பார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது உலகளவில் மிகப்பெரிய அளவு ஹிட் அடித்து ரசிகர்களால் கொண்டாடப் பட்ட ரௌடி பேபி பாடல் இணையத்தில் 1.4 பில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயாணனின் சிறப்பு பேட்டியை காண.